பி.ஆர்.டி.சி. ஊழியர் நூதன போராட்டம்
புதுச்சேரி பி.ஆர்.டி.சி. ஊழியர் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.;
புதுச்சேரி
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர் பி.ஆர்.டி.சி. அலுவலகம் முன்பு நேற்று மளிகை பொருட்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சாலை போக்குவரத்து கழகம் சார்பில் முறையாக சம்பளம் வழங்குவதில்லை, கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை, சம்பள நிலுவைத்தொகை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்., இதனால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுவதை அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.