போலீஸ் டி.ஐ.ஜி.க்கு ரங்கசாமி வாழ்த்து

புதுவை போலீஸ் டி.ஐ.ஜி. முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.;

Update:2023-10-05 22:41 IST

புதுச்சேரி

புதுவை போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ்-க்கு டி.ஐ.ஜி.யாக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து அவருக்கு டி.ஐ.ஜி. பதவிக்கான பேட்ஜ்-ஐ முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அணிவித்தனர். அப்போது சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்