போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி

காலாப்பட்டில் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2023-10-04 23:40 IST

புதுச்சேரி

காலாப்பட்டில் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.5 கோடி நிலம்

புதுச்சேரி கடற்கரை சாலையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் நவீன் பாலாஜி (வயது 43). இவருக்கு காலாப்பட்டு புதுவை பல்கலைக்கழகம் அருகே 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது இடத்திற்கு அருகில் மாணிக்கவேல் என்பவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

இந்த 4 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை முத்தியால்பேட்டை செயின்ட் சிமோன்பேட் பகுதியை சேர்ந்த ராம்ராஜ், அவரது மகன் வினேஷ் ஆகியோர் திருடி சொத்துகளை அடமானம் வைத்தது போல போலி ஆவணங்கள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

கோர்ட்டு உத்தரவுப்படி வழக்கு

இந்த மோசடிக்கு கடலூர் திருப்பாதிரிபுலியூர் கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கம் வேலு, திருவள்ளூர் தாடபெரும்பாக்கம் பொன்ராஜா, நாமக்கல் பரமத்திவேலூர் சேகர் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கும்பல் பணம் கேட்டு, நவீன் பாலாஜியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நவீன் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி காலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் ராம்ராஜ், வினேஷ், கார்த்திகேயன், வேலு, பொன்ராஜா, சேகர் ஆகிய 6 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்