தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார்.
போலீசார் அந்த வாலிபரை வளைத்து பிடித்து விசாரித்தபோது, தாளமுத்துநகர் கொத்தனார் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 32) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு பைக்கை மோட்டார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.