தலைமைப்பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடி - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-08 11:40 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோடியின் இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்