குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.;
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குற்றால அருவிகளில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அருவிகளில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.