திண்டுக்கல்: சாலை தடுப்பில் அரசு பேருந்து மோதி விபத்து - உயிர்தப்பிய பயணிகள்

விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கியது.;

Update:2025-10-30 21:05 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் சாலை தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கியது. அதே சமயம், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்