'ஆங்கில வழி பள்ளிகளை மூட வேண்டும்' - மதுரை ஆதீனம் பேச்சு

ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்தார்.;

Update:2025-03-07 21:59 IST

கன்னியாகுமரி,

குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம், மும்மொழி கொள்கை அவசியம் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "ஆங்கிலம் அடிமை மொழி, அதனை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் கற்கலாம். ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்