முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை பயணம்

ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளார்.;

Update:2025-04-12 14:06 IST

சென்னை,

முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளார். ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளார். கோவை சங்கனூர் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தெரிவித்தார்.

இதனால், ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அரசியல் பரபரப்புக்கு இடையே ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதம் தோறும் இந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்