சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை... எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பதிவு?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.;

Update:2025-08-22 08:20 IST

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மெரினா, நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, மயிலாப்பூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், புழல், அண்ணாநகர்.-போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடி கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னை தியாகராய நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதிகாலையில் கனமழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரத்தில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது. இதைபோல அடையாறு 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது; மேடவாக்கம் 7.5 செ.மீ., நுங்கம்பாக்கம் 6.7 செ.மீ., நீலாங்கரை, வேளச்சேரி தலா 6 செ.மீ., எழும்பூரில் 45 மி.மீட்டரும், அயனாவரத்தில் 38 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்