தலைசிறந்த ஆன்மீகவாதி தேவரின் சேவையை நினைவுகூர்வோம்: ஓ.பன்னீர்செல்வம்

தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-30 19:38 IST

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே, எனக்காக அல்ல” என்று சொல்லி தன்னையே இந்தியத் திருநாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்த அரசியல் ஞானி, தலைசிறந்த ஆன்மீகவாதி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்

தேவர் திருமகனாரின் குருபூஜை தினமான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.

அவரின் அர்ப்பணிப்பு சேவையை நினைவுகூரும் அதே சமயத்தில், அவருடைய பொன்மொழிகளை பின்பற்றி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்