சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 16.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாநகர்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.
அம்பத்தூர்: டி.வி.எஸ்.நகர், கண்டிகை தெரு, அன்னை நகர் பிரதான சாலை, பத்மாவதி நகர், அன்பு நகர், சந்தோஷ் நகர், மோகன் கார்டன், தண்ணீர் கால்வாய் சாலை, பல்லா தெரு.
தில்லைகங்கா நகர்: வாஞ்சிநாதன் தெரு மற்றும் விரிவாக்கம், உத்தமர் காந்தி தெரு, திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் தெரு, நேதாஜி தெரு, கேசரி நகர் பிரதான சாலை மற்றும் 1 வது முதல் 7வது தெரு வரை, சுரேந்திரா நகர் 6 வது முதல் 11வது தெரு மற்றும் விரிவாக்கம், பாரத் நகர், யமுனை தெரு, காவேரி தெரு, தென்பெண்ணை தெரு, தாகூர் தெரு, வால்மீகி தெரு, இளங்கோ தெரு,நேரு தெரு, கிருஷ்ணா தெரு, விவேகானந்தர் தெரு, இன்கம் டாக்ஸ் காலனி 1வது தெரு, பாலாஜி நகர் 1வது தெரு, சாந்தி நகர், திரா அஸ்காட், கே.ஜி.பினாக்கல்.