திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி சோளிபாளையத்தில் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் அரிசி, எண்ணெய் உள்பட உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் கடலை எண்ணெய் விலை லிட்டர் ரூ.60 உயர்ந்துள்ளது. தேர்தலில் திமுக அளித்த 521 வாக்குறுதிகளில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி நாட்கள் மற்றும் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
திமுக ஆட்சியில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் தடையின்றி கிடைக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. நாங்கள் சுட்டிக்காட்டியபோதே போதைப்பொருளை ஒழிக்காமல் விட்டுவிட்டார் ஸ்டாலின்.கை மீறி போன பிறகு முதல்-அமைச்சருக்கு ஞானோதயம் வந்துள்ளது. அதிமுக கூட்டணியை பார்த்து திமுக, விசிக உள்ளிட்டவை பதறுகின்றன. வரும் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெருன்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.