எடப்பாடி தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

தேனியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.;

Update:2025-09-05 10:35 IST

தேனி,

‘மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் தோறும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன்படிம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தேனி மாவட்டத்துக்கு நேற்று அவர் சென்றார். ஆண்டிப்பட்டி-க.விலக்கு சாலையில் கரிசல்பட்டி விலக்கில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். இன்று கம்பம், போடி, தேனி ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், தேனியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள், விவசாயிகள் திரும்பி சென்றனர். கோபியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மனம் திறந்து பேசி வரும் நிலையில், ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்