இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025

Update:2025-10-20 09:14 IST
Live Updates - Page 2
2025-10-20 11:39 GMT

விக்ராந்த் போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமற்ற இரவுகளை கொடுத்தது: ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு சென்ற அவர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் ஒளிகளின் திருவிழாவை கொண்டாடினார்.

அப்போது, வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இன்று ஆச்சரியம் அளிக்கும் திருநாள். எனது ஒருபுறம், சமுத்திரம் உள்ளது. மறுபுறம் அன்னை இந்தியாவின் துணிச்சலான வீரர்களின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன். இந்த புனித திருவிழாவை உங்களுடன் கொண்டாடுவதில் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருக்கிறேன் என்றார்.

2025-10-20 11:35 GMT

வேகம் குறையாத ’டியூட்’...3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைபப்டம் 3 நாட்களில் உலகளவில் ரூ.66 கோடி வசூலை கடந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

2025-10-20 10:10 GMT

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

2025-10-20 10:07 GMT

6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் முன்பதிவு குறைவாக இருப்பதால், 22 முதல் 29-ம் தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

2025-10-20 09:55 GMT

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீரர் அபய் சிங் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், உலக தரவரிசையில் 30-ம் இடம் வகிக்கும் இந்திய வீரர் அபய் சிங் (வயது 27) மற்றும் உலக தரவரிசையில் 31-ம் இடம் வகிக்கும் எகிப்து நாட்டின் முகமது எல்ஷெர்பினி ஆகியோர் விளையாடினர்.

62 நிமிடங்கள் பரபரப்புடன் நீடித்த இந்த போட்டியில் முதல் செட்டை 11-8 என்ற புள்ளி கணக்கில் அபய் வென்றார். எனினும், அடுத்த 2 செட்டுகளை முகமது கைப்பற்றினார். 4-வது செட்டில் திறமையாக விளையாடி அபய் வெற்றி பெற்றார்.

2025-10-20 09:54 GMT

நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால், சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 7வது முறையாகும். அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரத்து 420 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது.

2025-10-20 08:45 GMT

’காந்தா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் "காந்தா" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2025-10-20 08:17 GMT

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: தேனி ,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் 71 அடி கொள்ளவை கொண்ட வைகை அணை முழு அளவை எட்டியுள்ளது. 

2025-10-20 07:15 GMT

சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியானது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் God Mode பாடல் வெளியாகியுள்ளது.

2025-10-20 06:50 GMT

37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை - ரூ.74.74 லட்சம் பறிமுதல்

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 37.74 லட்சம் ரூபாய் கனக்கில் வராத பணம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. கிண்டி வேளாண் வாரிய அலுவலகத்தில் குரூப் 1 அதிகாரியால், கழிவறையில் பிளஷ் செய்யப்பட்ட பணம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இங்கிருந்து மட்டும் ரூ.4.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்