இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

Update:2025-06-29 09:16 IST
Live Updates - Page 3
2025-06-29 06:36 GMT

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுகிறாரா..? வெளியான புதிய தகவல்


இந்திய அணியின் நேற்றைய பயிற்சியில் பும்ரா கலந்துகொண்டு பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2025-06-29 06:34 GMT

சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை


சிறுவன் கடத்தல் விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-06-29 06:33 GMT

அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த மாமியார் கைது


கலையரசன் கொலை வழக்கில் மனைவி தமிழரசி, மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல், மற்றும் சுனில் குமார் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மாமியார் சந்தியாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-06-29 05:47 GMT

இயந்திரக் கோளாறு - தாய்லாந்து விமானம் திடீர் ரத்து


சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லவிருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் தெரிவித்திருந்தார்.

விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 164 பயணிகள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.

2025-06-29 05:44 GMT

பதவிக்கு ஆசைப்படாதவர் ராமதாஸ் - பாமக எம்எல்ஏ அருள்


ராமதாசை சுற்றி 3 தீயசக்திகள் இருப்பதாக அன்புமணி கூறிய நிலையில் பாமக எம்.எல்.ஏ. அருள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ். 36 ஆண்டுகளாக நான் பாமக நிறுவனர் ராமதாசுடன் பயணித்து வருகிறேன். ராமதாசை இழிவுபடுத்துவதாகக் கூறி பாட்டாளி வர்க்கத்தை அன்புமணி இழிவுபடுத்திவிட்டார். ராமதாசுக்கு இழிவு ஏற்படும்போது பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்” என்று அருள் கூறினார்.

2025-06-29 05:12 GMT

தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு


திருச்செந்தூர் கோவிலில் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மருதமலை, வயலூர், பழனி கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டன என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

2025-06-29 04:14 GMT

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு


ஜெகநாதர் ரத யாத்திரை இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் தொடக்கியது. ஜெகநாதர் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ கண்டிஜா கோவிலில் இருந்து ரத யாத்திரை தொடங்கியது. யாத்திரையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.


2025-06-29 04:13 GMT

சாம்சனுக்கு ஈடாக 2 சிஎஸ்கே வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்... வெளியான தகவல்


2025 சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.


2025-06-29 04:07 GMT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு


மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியில் தற்போது 119.22 அடியை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீர்வரத்து நேற்று 80,984 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது அது 68 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 


2025-06-29 04:02 GMT

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், "பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்