இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025

Update:2025-06-29 09:16 IST
Live Updates - Page 4
2025-06-29 03:59 GMT

வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகல்


கடைசி போட்டி முடிவடைந்ததும் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகுவதாக அறிவித்தார்.

2025-06-29 03:55 GMT

9½ பவுன் நகை மாயம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்


திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-06-29 03:53 GMT

பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் அபார சதம்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 418 ரன்கள் குவிப்பு


முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்துள்ளது. கார்பின் போஷ் 100 ரன்களுடனும், மபாகா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் தனகா சிவாங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.



2025-06-29 03:51 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது


மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டு இருந்த போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 


2025-06-29 03:48 GMT

இன்றைய ராசிபலன் - 29.06.2025


சிம்மம்

தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின் போது அதிக கவனம் தேவை. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


Tags:    

மேலும் செய்திகள்