இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள். வக்பு விவகாரங்களில் அரசு தலையீடு இருக்காது. அந்த எண்ணமும் இல்லை என்று மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சியில் திடக் கழிவுகள் மேலாண்மை குறித்து கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர், குப்பைக் கிடங்கு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 342 பில்லியன் டாலராக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செயல் திறன் துறையின் தலைவராகவும் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ-பாஸ் நடைமுறையை எதிர்த்து நடக்கும் முழு கடையடைப்பு போராட்டத்தால் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய வீதிகளில் ஜாலியாக காய்கறி வியாபாரிகள் கிரிக்கெட் விளையாடினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானம், இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். எப்போதும் மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.மறப்போம் மன்னிப்போம் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரிய தொல் பொருட்கள் கிடைத்த நிலையில் தற்போது தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 6 மி.மீ சுற்றளவு, 22 மி.கி. எடையும் கொண்டுள்ளது. இதுவரை இங்கு தங்கத்தினால் ஆன 7 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அம்மா உணவகம் மட்டுமே திறந்திருந்ததால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று உணவு உண்டனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்புக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப்-6ல் திறந்து வைக்கவுள்ள நிலையில் ஹெலிபேட் இறங்குதளம், பாம்பன்பாலம், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது.
விழுப்புரம் பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். உடையாந்தாங்கலை சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் லஞ்சம் பெற்ற விஏஓ திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.