இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை,
கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுகுப் பேட்டி அளித்த சிபி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: -
எந்த பொண்ணுக்கும் நடக்ககூடாத கொடூரம். கோவை மாணவி, வன்கொடுமை; கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். பாதித்த மாணவி, அவரது குடும்பத்துக்கு நம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பீகாரின் சாலைகள் அமெரிக்காவுக்கு இணையாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தேர்தல் பிரசாரத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசி உள்ளார். சுவாரஸ்யம் என்னவென்றால், இதே கருத்தை கடந்த 2022ம் ஆண்டிலும் நிதின் கட்கரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருளின் கார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கார் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரானது, அன்புமணி மோதல் போக்கை உருவாக்குகிறார். அன்புமணி நடைபயணம் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்துகிறார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
9 வயது சிறுவன் லக்சனின் கை, கால், தோள்பட்டை என பல்வேறு இடங்களில் தெருநாய் கடித்தது. ஓம்சக்தி நகரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தெருநாய் துரத்தி கடித்தது. புதுக்கோட்டை அன்னவாசல் அருகே 2 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்து அன்னவாசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், ராயபுரம், திருவெற்றியூர், காசிமேடு, மூலக்கடை, புழல், கொளத்தூர், பெரம்பூர், மாதவரம், அம்பத்தூர், ஓரகடம் ,பாடி, கொரட்டூர், வில்லிவாக்கம், நந்தனம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, கிண்டி, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் மணிரத்னம் வீட்டிற்கும், அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டிற்கும், செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. சரக்கு ரெயில் நிற்கும் அதே தண்டவாளத்தில் எப்படி பயணிகள் ரெயில் வர அனுமதிக்கப்பட்டது?. இது மனிதத் தவறால் நடந்ததா? அல்லது சிக்னல் கோளாறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைத்தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பீகாரில் 18 மாவட்டங்களை சேர்ந்த 121 தொகுதிகளில் அனல் பறந்த பிசாரத்தை தலைவர்கள் நிறைவு செய்தனர். முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பீகாரில் 121 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அமெரிக்கா: மருந்து ஆர்டர் செய்த பெண்ணுக்கு மனித கைகள் அடங்கிய பெட்டி டெலிவரி செய்ததால் அதிர்ச்சி அடைந்தார். பார்சலை பிரித்த அவர் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, விசாரணையில் மருத்துவர் ஒருவரின் பார்சலை இவருக்கு மாற்றி டெலிவரி செய்தது தெரியவந்துள்ளது.
வயநாடு அருகே போலீஸ் ரோந்து வாகன நடமாட்டத்தை, கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு தெரிவித்த இரு டாக்ஸி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம், மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு தொடர்ந்து இவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்தின் நடமாட்டத்தை தெரிவித்து வந்துள்ளனர்.