டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை, நீலகிரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய திருக்கல்யாண திருவிழா ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
திருவள்ளூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
நவீனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தவெக சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜய் வருகை
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தவெக சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் - 7 பேர் கைது
சேலம் வாழப்பாடியில் பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமானநிலையம்: 1,000 ஏக்கர் நிலம் கையகம் - வருவாய் துறை தகவல்
பரந்தூரில் 5,320 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மூவருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ராதாவுக்கும், மும்பையை சேர்ந்த தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேவேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.