பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி
தஞ்சை: நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பட்டாசு குடோன் வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தொற்று கட்டுக்குள் உள்ளது. வீரியம் இல்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை இன்று (மே 18) பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறியுள்ளார்.
சென்னை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பயணியிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
சாலையோரம் கிணறுகளை ஆய்வு செய்க; தலைமைச்செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் உரிய பாதுகாப்பின்றி, தடுப்புகளின்றி உள்ள கிணறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.
இரும்பு உருக்கு ஆலையில் வடமாநில தொழிலாளி பலி
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் சூடான குழம்பு சிதறியதில் திரிநாத் தாஸ் என்பவர் உயிரிழந்தார். சூடான இரும்பு குழம்பை கிரேன் மூலம் எடுத்துச் சென்றபோது கிரேன் பெல்ட் அறுந்து விழுந்தது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் மற்றும் குஜராத் வெற்றி பெற்றால் பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகள் பிளே ஆப்புக்கு செல்லும்
போலீஸ் வாகனம் மரத்தில் மோதி ஆய்வாளர் காயம்
வேலூர்: காட்பாடி அருகே புளிய மரத்தில் போலீஸ் வாகனம் மோதியதில் ஆய்வாளர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். காவல் ஆய்வாளர் தயாளன், ஓட்டுநர் தினேஷ், ஆய்வாளரின் மகன் சித்தா தர்ஷன் ஆகியோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.