கரூரில் 33 நாட்களுக்கு பிறகு த.வெ.க. மாவட்ட அலுவலகம் திறப்பு

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.;

Update:2025-10-30 20:48 IST

கரூர்,

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் இதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்து 33 நாட்கள் ஆன பிறகு, கரூரில் உள்ள த.வெ.க. மாவட்ட அலுவலகத்தை திறந்து கட்சி நிர்வாகிகள் அன்றாட பணிகளை இன்று துவங்கினர். உயிரிழந்தவர்களின் உறவினர்களை விஜய் சந்தித்த பிறகு, தற்போது த.வெ.க. சார்பில் மற்ற கட்சி பணிகள் தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்