13 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே கோணாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 19), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
இருப்பினும், பிரேம்குமார் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.