ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காளதேச அணி அறிவிப்பு

வங்காளதேசம் - ஜிம்பாப்வே 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 28-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-04-24 08:55 IST

image courtesy: twitter/@ICC

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 28-ந் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த 2-வது போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்மூல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன அனமுல் ஹக் 3 வருடங்களுக்குப்பின் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:- நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் பிஜோய், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் பூயான் அன்கான், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், சையத் காலித் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்.

Tags:    

மேலும் செய்திகள்