சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை கடந்த ரோகித் சர்மா

3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.;

Update:2025-12-07 06:24 IST

மும்பை,

நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 75 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவர் 27 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) 20 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் ஒட்டுமொத்தத்தில் 14-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 38 வயதான ரோகித் சர்மா 505 சர்வதேச போட்டிகளில் ஆடி மொத்தம் 20,048 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 34,357 ரன்களுடன் (664 போட்டிகள்) முதலிடத்தில் இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்