மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது.;

Update:2025-09-17 16:18 IST

Image Courtesy: @ICC

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 121 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக அயபோங்கா காக்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த தென் ஆப்பிரிக்க அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 259 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மாரிசேன் காப் 120 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்