வாஷிங்டன்
ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு இழைத்து விட்டதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.