நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்..தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார்..விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்..சினிமா அனுபவங்கள் குறித்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். அதை யாரும் கணிக்க முடியாது..சில கதைகளை கேட்கும்போது அற்புதமாக தோன்றும். ஆனால் திரையில் வரும்போது சப்பென்று ஆகிவிடும்..அதே சமயத்தில் சாதாரணமாக தோன்றிய கதைகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்பட கூடாது..கதை பிடித்திருந்தால் நடிப்பது வரை தான் நமது கையில் இருக்கும். வெற்றி தோல்வி என் எல்லைக்குள் இருக்காது..எனவே தோல்வி பற்றி அதிகமாக யோசிக்காமல் வந்த வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.