தினத்தந்தி
அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் தோல்வி அடைந்தார்.
மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். பா.ஜனதாவும் கண்டுகொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் த.வெ.க.விலும் சேர்ந்துவிட்டனர்.
என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஓ.பன்னீசெல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.