தினத்தந்தி
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'இச்சட்டா வாகனமுலு நிலுபரடு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.