தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நமீதா..கசப்பான அனுபவங்களை குறித்து நமீதா கூறும்போது,''எனக்கு திடீரென்று உடல் எடை அதிகமானது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது..ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர்..அதை பார்த்து வருத்தமானேன். இதனால் 25 கிலோ எடை வரை குறைத்தேன்..எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள்..என்னைப்பற்றி அவதூறு கருத்துக்கள் பதிவிட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று என்னிடம் கணவர் தெரிவித்தார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்