தினத்தந்தி
தமிழில் 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
அதன் பிறகு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து, உலகளவில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்துள்ளார்.
இவர் பிரபல பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.