பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர், அலியா பட்..இவர் நடிகர் ரன்வீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்..திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்..சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் அவர் நடித்த ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது..தற்போது அலியா பட் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்..டாம் ஹார்பெர் இயக்கும் ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்' என்ற ஆக்ஷன் படத்தில் அலியா பட் நடித்து கொண்டிருக்கிறார்..இதுகுறித்து அலியா பட் கூறுகையில், “படப்பிடிப்பின் போது ஆங்கிலத்தில் பேசுவது கடினமாக இருந்தது..ஆங்கிலத்தில் பேசுவேன் என்றாலும், இந்தியில் தான் அதிகம் வசனம் பேசி நடித்துள்ளேன்..ஆனால், இப்போது முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பது எனக்கு வித்தியாசமாக இருக்கிறது..மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியவில்லை'', என்றார்.