கடந்த 12-ந் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது..அதில் அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் கலந்துக் கொண்டனர்.பின்னர், புதுமணத் தம்பதிகள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உடன் கிம் கர்தாஷியன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்..புதுமண தம்பதிகளுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் "இந்தியா எனது இதயத்தை கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.