தினத்தந்தி
கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும். அதனுடன் பால் , தண்ணீர் வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும். கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு அதிக வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக அதிகரிக்க செய்கிறது கொய்யாப்பழ ஜூஸ்.
கொய்யா ஜூஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை சீராக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் கொய்யா இலை சாறு சிறந்தது.
கொய்யா ஜூஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவுகின்றன.
ரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான முறையில் குறைக்க கொய்யாப்பழ ஜூஸ் சிறந்த தீர்வாகும்.
கொய்யா ஜூஸில் ஆன்டி-ஏஜிங் மற்றும் வைட்டமின் ஏ, சி நிறைந்து காணப்படுகிறது. இது சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.
கொய்யா ஜூஸில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை மேலாண்மைக்கு சிறந்து விளங்குகிறது.
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.