வயல் வரப்புகளில் கிடைக்கும் அருகம்புல்லில் இவ்வளவு நன்மைகளா?

Subash T

வயல் வரப்புகளிலும், வெட்ட வெளிகளிலும் காணப்படும் தாவரங்களில் அருகம்புல்லும் ஒன்று. இது நீண்ட இலைகளுடன் நேராக வளரும் தன்மைஉடையது. தண்டு மெல்லியதாக, ஊசி போல் கூர்மையாகக் காணப்படும்.

அருகம்புல் சிறு சிறு கணுக்களைப் பெற்றிருக்கும். அருகம்புல்லில் ஏராளமான பச்சையம் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது.

அருகம்புல் காரத்தன்மை உடையது. இதில் உயிர்ச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இது தளர்ச்சியை நீக்கி, உடலுக்கு வலிமையைத் தரவல்லது.

அருகம்புல் உடலில் சேரும் நச்சுத்தன்மைகளை நீக்குகிறது. ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தி, குடற்புண்ணைக் (அல்சர்) குணப்படுத்துகிறது.

இது ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

அருகம்புல் பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது. பற்களை வெண்மையாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.

நச்சுப் பொருள்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. இதில் ‘இன்சுலின்’ நிறைந்துள்ளதால், நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை நீக்கி, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர, எல்லா நோய்களும் குணமாகும். இதைக்குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனினும் மருத்துவரை அணுகிவிட்டு சாப்பிடுவது நல்லது.

பெண்களுக்கு உடலில் தேவையற்ற முடி வளர்கிறதா? அதற்கு இதுதான் காரணம்..