2007-ம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி..அதன் பிறகு 'அங்காடி தெரு' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் சினிமாவில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்..தொடர்ந்து கலகலப்பு, எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2 , உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார்..சமீபத்தில் வெளியான 'மதகஜராஜா' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்