சர்க்கரை நோயாளி உளுந்து வடை சாப்பிடலாமா?

தினத்தந்தி

வாய்க்கு ருசியாக சாப்பிடாமல் எப்பொழுதும் சப்புனு மண்ணு மாதிரியே சாப்பிட்டுட்டு இருக்கிறது ஒரு வாழ்க்கையா? என்று புலம்பும் சர்க்கரை நோயாளிகளைப் பார்த்திருப்போம்.

நீங்கள் எப்போதாவது ஆசையாக வடை சாப்பிடணும்னு தோன்றினால் நீங்கள் உளுந்து வடையை டாக்டர் பரிந்துரையில் சாப்பிடலாம்.

உளுந்து வடையில் அடிப்படையாக இருப்பது உளுத்தம் பருப்பு தான். அதில் கார்போஹைட்ரேட் கிடையாது. உளுத்தம் பருப்பு முழுவதும் புரதம் தான் இருக்கிறது.

உளுந்து வடை சாப்ட்டாக இருப்பதற்காக சில இடங்களில் மைதா சேர்ப்பார்கள். மொறுமொறுப்பாக இருப்பதற்கு சிறிது அரிசி மாவு சேர்ப்பார்கள்.

அப்படி மைதாவோ அரிசி மாவோ சேர்க்கும்போது தான் ரத்தத்தின் சர்க்கரை அளவு உயரும். உளுந்து வடை குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட ஓர் உணவு தான்.

ஒரு வடையில் 90 முதல் 100 கலோரிகள் வரை இருக்கக் கூடும். அதில் 20 சதவீத கலோரிகள் வேண்டுமானால் கூடுதலாக சேர்க்கும் அரிசி மாவு, மைதா போன்றவற்றில் இருந்து கிடைக்கும்.

வடை சாப்பிடுவதற்கு நாம் யோசிக்கும் மிக முக்கியமான காரணம் என்னவென்றால் அதில் இருக்கும் எண்ணெய் தான். அதாவது வடையில் அதிக கொழுப்பு, அதிக புரதம், குறைவான கார்போஹைட்ரேட் என்கிற விதத்தில் இருக்கிறது.

வடை சாப்பிடும்போது எப்படி சாப்பிடுவோம்? மெயின் டிஷ் ஏதாவது கார்போஹைட்ரேட் உணவை சாப்பிட்டு விட்டு அதற்கு துணையாக சைடு டிஷ்ஷாக வடையைச் சாப்பிடுவது வழக்கம். அப்படி மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது கட்டாயம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கத் தான் செய்யும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ருசியாக வடை சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தால் மற்ற மாவுச்சத்து உணவோடு சேர்த்து எக்ஸ்ட்ராவாக வடையைச் சாப்பிடாமல் அந்த உணவுக்குப் பதிலாக சாம்பாருடன் இரண்டு வடை மட்டும் காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளி தேன் சாப்பிடலாமா?