காலை 5 மணிக்கு வெறும் வயிற்றில் டீ பருகலாமா?

தினத்தந்தி

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

டீயில் ஆன்டி -ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது.

வெறும் வயிற்றில் டீ பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும்.

டீயில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும்.

டீயில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் டீயில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.

காலையில் டீ பருகுவது, அமில, கார சம நிலையையும் சீர்குலைக்கும். அசிடிட்டி பிரச்சினை தலைதூக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும். கீழ் மார்பில் வலியை உணரக்கூடும்.

டீ அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்'' என ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பால், தயிர், மோர் பருக சரியான நேரம் எது தெரியுமா?