சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது..தங்களது இருப்பிடங்களில் இருந்து வேலைக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது..புயல் காரணமாக மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை..தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், ரெயில் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது..பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களிலும் நெடுஞ்சாலைகளிலும் மரங்கள் சாய்ந்தன..என்.டி.ஆர்.எப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.