சுவையும் குளிர்ச்சியும் தரும் மாம்பழ ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!

தினத்தந்தி

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : பெரிய மாம்பழம் – 2, பால் – 1 கோப்பை, வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை, ஜெல்லி – 2 மேஜைக்கரண்டி ஆகியவை.

செய்முறை : முதலில் பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

பின் மாம்பழத்தை கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து கலந்து, அதனை மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

பால் கலந்த மாம்பழச் சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

இப்போது சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார் !

குழந்தைகள் விரும்பும் பிரட் அல்வா செய்வது எப்படி?