வெள்ளரிக்காயை தோல், விதை நீக்கி துண்டுகளாக வெட்டவும்..கீறிய மிளகாய், உளுந்து, பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கவும்..வெள்ளரிக்காயை தனியாக வதக்கி, ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் மிக்சியில் அரைக்கவும்..வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்..நீர்ச்சத்து நிறைந்த சுவையான வெள்ளரிக்காய் சட்னி ரெடி.