வறுத்த வேர்க்கடலை பிரியரா? இது உங்களுக்குத்தான்..!

Subash

வறுத்த வேர்க்கடலையில் அதிக அளவு புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
வறுத்த வேர்க்கடலையில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வறுத்த வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வறுத்த வேர்க்கடலை செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உடல் வீக்கத்தை குறைக்கிறது.
வறுத்த வேர்கடலையில் நிறைந்துள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் தசைகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
வறுத்த வேர்க்கடலை வைட்டமின் சியின் சிறந்த மூலமாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
வறுத்த வேர்க்கடலையில் உள்ள புரதத்தின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
குறிப்பு : வறுத்த வேர்க்கடலையில் உப்பு சேர்க்கப்படுவதால், தினமும் அதிகமாக சாப்பிடுவது சோடியம் அளவை அதிகரிக்கலாம். எனவே அளவோடு எடுத்து கொள்ளலாம்.