பொடுகுத்தொல்லையில் இருந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி வெளியில் வர முடியும்..முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்ய வேண்டும்..பின்னர் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் பொடுகு நீங்கிவிடும்..இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்துக்கொள்ள வேண்டும்..பின்னர் அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத்தொல்லை தீரும்..இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.