எத்தியோப்பியன் நாள்காட்டியில் 13 மாதங்களா?

தினத்தந்தி

ஆப்பிரிக்க கண்டத்தில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது.

ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது.

இது வடக்கில் எரித்திரியா, கிழக்கில் சோமாலியா, தெற்கில் கென்யா, மேற்கில் சூடான் போன்ற நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

உலகின் நீளமான நதியான நைல் நதியின் கிளையான 'நீல நைல் நதி' இங்கிருந்துதான் தொடங்குகிறது.

எத்தியோப்பியாவில் வாழும் மக்கள் 'கீஸ்' என்ற எழுத்துமுறையை பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் தனித்துவமான எத்தியோப்பியன் நாள்காட்டியை பின்பற்றுகின்றனர்.

இது 13 மாதங்களை கொண்டது. 13-ஆவது மாதம் 5 அல்லது 6 நாட்களை கொண்டது.

இதனால் பொதுவான நாள்காட்டியான கிரிகோரியன் நாள்காட்டியை விட இது சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.

பளபளப்பான சருமத்திற்கான 10 பழங்கள்!