நீர்த்துப் போன உணவை வீணாக்காதீர்கள்... உடனே கெட்டியாக்கும் 8 எளிய சமையல் குறிப்புகள்!

தினத்தந்தி

சமையலில் சில நேரங்களில் கூட்டு, குழம்பு, மாவு போன்றவை எதிர்பாராத விதமாக நீர்த்துவிடும். அப்படிப்பட்ட சமயங்களில் உதவும் சில எளிய சமையல் குறிப்புகள் இதோ...

கூட்டு, குழம்பு நீர்த்துவிட்டால்: சிறிதளவு பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விட்டால் கெட்டியாகி சுவையும் அதிகரிக்கும்.

அடை மாவு நீர்த்துவிட்டால்: சிறிதளவு கார்ன்பிளேக்ஸ் தூள் சேர்த்துக் கலந்தால் மாவு சரியான பதத்திற்கு வந்துவிடும்.

குருமா நீர்த்துவிட்டால்: ஒரு கைப்பிடி அளவு நொறுக்கிய நூடுல்ஸ் அல்லது சிறிதளவு சோளமாவைக் கரைத்து சேர்த்து கொதிக்க வைத்தால் கெட்டியான பதம் கிடைக்கும்.

கோதுமை அல்வா அல்லது மைதா அல்வா நீர்த்துவிட்டால்: சிறிதளவு சோளமாவை கரைத்து சேர்த்து கிளறினால் அல்வா கெட்டிப்பட்டு சுவையும் மேம்படும்.

பொங்கல் நீர்த்துவிட்டால்: வறுத்த ரவை அல்லது அவலை பொடித்து சேர்த்து நன்றாக கிளறினால் சரியான பதம் கிடைக்கும்.

தோசை மாவு நீர்த்துவிட்டால்: 2 ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவை சிறிது பாலில் கலந்து மாவில் சேர்த்தால் கெட்டியாகும். புளிப்பும் அதிகரிக்காது.

பாயசம் அல்லது சேமியா உப்புமா நீர்க்க இருந்தால்: பருப்பு அல்லது ஜவ்வரிசி பாயசத்தில் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து சேர்க்கலாம். சேமியா உப்புமாவில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறினால் பதம் சரியாகும்.

சாதம் உதிரியாக இருக்க: சாதம் வெந்தவுடன் சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து மெதுவாக கிளறினால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.

சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி?