துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் தீரும்..!

Subash T

பலாப்பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப்பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது.

துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது.

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும்.

வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன.

மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.

இதில் பைரிடாக்ஸின் எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

காலை-மதியம்-இரவு தயிர் சாப்பிட்டால் என்ன ஆகும்..?