முட்டை மசாலா தோசை செய்வது எப்படி?

தினத்தந்தி

தோசை மாவு, முட்டை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் தோசை மாவை ஊற்றி வட்டமாகத் தேய்க்கவும்.

தோசையின் மேல் தயாரித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றி சமமாகப் பரப்பவும்.

சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் முட்டை நன்றாக வெந்து தோசை பொன்னிறமாகும் வரை சுடவும்.

சுவையான முட்டை மசாலா தோசையை சூடாகத் தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

சுவையான வாழைப்பழ பஜ்ஜி செய்வது எப்படி?