தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தியிலும் பிசியாக இருக்கிறார்..இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு கவர்ச்சியாக தன்னை புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்..தற்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை சிலர் விமர்சித்து உள்ளனர்..இதற்கு பதில் அளித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும்..இது பெரியவர்கள் சொன்ன வாக்கு. நான் அதை கச்சிதமாக கடைபிடிக்கிறேன். பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும்..அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும் நடிகையாக கவர்ச்சியில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீறமாட்டேன்..எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும்'' என்றார்.