தினத்தந்தி
பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் தன்மை மா இலைகளுக்கு உள்ளது. சரும சுருக்கம், வயதான அறிகுறிகள், தோல் வறட்சி போன்றவற்றை குறைக்க மா இலைகள் உதவக்கூடும்.
மா இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தீக்காயங்களுக்கு நிவாரணம் அளிக்க உதவலாம். மா இலைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை தீக்காயத்தின் மீது மெதுவாக தடவலாம்.
முடி உதிர்வு, முடி பிளவு, முடி வளர்வதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மா இலைகளை பயன்படுத்தலாம். இதில் உள்ள வைட்டமின் A மற்றும் C கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் மா இலை சாற்றை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கலாம். இது சிறுநீரக கற்களை உடைக்கவும், அவை சிறுநீர் மூலம் வெளியேறவும் உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மா இலைகளை பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மேலும், மா இலை விக்கலை குறைக்க உதவக்கூடும். வயிற்றுப் புண்களை சரி செய்யவும் இது உதவலாம். மா இலைகளை டீயாக தயாரித்து குடித்து வரலாம்.
மா இலையில் உள்ள பாலிபினால்களான கேலோட்டானின், பினாலிக் அமிலம் மற்றும் குவெர்செடின் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.